திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் யோகா தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் யோகா தின கொண்டாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-22 11:46 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் யோகா ஆசிரியர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து, யோகாவின் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்