யோகா தின கொண்டாட்டம்
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.;
சுரண்டை:
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் பொது நூலகம் மற்றும் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தின் சார்பில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளுக்கான யோகா பயிற்சிகளும், தனித்திறன் போட்டிகளும் நடந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமை தாங்கினார். அரசு நூலகர் வெற்றிவேலன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சி மைய பயிற்சியாளர் மருதுபாண்டி வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞர் விளையாட்டு அமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளர் ஜெகநாதன், வீரகேரளம்புதூர் அரசுப்பள்ளி ஆசிரியை மாலதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராமலட்சுமி, கல்லூரி பேராசிரியை மாலதி உள்பட ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.