மகரிஷி பள்ளியில் யோகா தினம்
தென்காசி மகரிஷி பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தென்காசி அருகே உள்ள கணக்கபிள்ளைவலசை மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக அரவிந்த் யோகா மையம் நிறுவனர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயின்றி வாழ வழி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். யோகா பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி மற்றும் யோகாசனம் ஆகியன நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் காயத்ரி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.