வெடிப்பு நோயால் பிச்சீஸ் பழங்களின் விளைச்சல் பாதிப்பு

கொடைக்கானலில் வெடிப்பு நோயால் பிச்சீஸ் பழங்களின் விளைச்சல் பாதிப்படைந்தது.

Update: 2023-05-05 19:00 GMT


'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பேரிக்காய், பிளம்ஸ், பிச்சீஸ் உள்ளிட்ட பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவ்வகை பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். கொடைக்கானாலில் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே பிச்சீஸ் பழங்கள் விளைச்சலாகும். இந்த பழங்கள் செண்பகனூர், வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட மலை கிராமங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பிச்சீஸ் பழங்கள் விளைச்சல் அடைந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக பீச்சீஸ் பழங்கள் வெடிப்பு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இதனால் பழங்கள் முற்றிலுமாக சேதமடைந்து விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க போரான், கால்சியம் குளோரைடு உள்ளிட்ட உரங்களை செடிகளின் மீது தெளிக்க வேண்டும். அதன் மூலம் நோயால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்