ஏற்காடு விபத்து: பலியானவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - மத்திய இணை மந்திரி கோரிக்கை

பேருந்து விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;

Update:2024-04-30 22:25 IST

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வெளியிட்ட தனது எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது;-

சேலம் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பதினோராவது கொண்டை ஊசி வளைவில் திடீரென விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியான துயரமும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

பேருந்து விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு என்னுடைய ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்