வாலிநோக்கம் கடல் பகுதியில் குவிந்த மஞ்சள் மூக்கு நாரைகள்

வாலிநோக்கம் உப்பள பாத்தி அருகே உள்ள கடல் பகுதியில் மஞ்சள் மூக்கு நாரைகள் குவிந்துள்ளன.

Update: 2022-08-22 16:02 GMT

சாயல்குடி

வாலிநோக்கம் உப்பள பாத்தி அருகே உள்ள கடல் பகுதியில் மஞ்சள் மூக்கு நாரைகள் குவிந்துள்ளன.

பறவைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிக அளவு பெய்த பருவ மழையால் அனைத்து பறவைகள் சரணாலயங்களிலும் மற்றும் பெரும்பாலான நீர்நிலைகளும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் பறவைகள் சரணாலயம் மற்றும் பெரும்பாலான நீர் நிலைகளில் ஏராளமான பறவைகள் குவிந்திருந்தன.

ஆனால் தற்போது கோடை காலம் நடந்து வருவதால் மாவட்டத்தில் பெரும்பாலான நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பறவைகள் நீர் நிலையை தேடி அலைந்து வருகின்றன.

மஞ்சள் மூக்கு நாரை

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் உப்பள பாத்தியை ஒட்டிய கடல் பகுதியில் ஏராளமான மஞ்சள் மூக்கு நாரைகள் குவிந்துள்ளன. உப்பள பாத்தி அருகே உள்ள கடல் பகுதியில் கூட்டமாக ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் நின்று இந்த பறவைகள் இரை தேடும் காட்சியை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர்.

இந்த மஞ்சள் மூக்கு நாரை பறவைகளோடு உள்ளான் குருவி, கடல் காவா, நீர் காகம் உள்ளிட்ட பலவிதமான பறவைகளும் குவிந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்