சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம்
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சுடலை ஆண்டவர் கோவில்
திசையன்விளை வடக்குத்தெரு கடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
விழா நாட்களில் பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, சமய சொற்பொழிவு மாரத்தான் போட்டி, நாடகம், இன்னிசை கச்சேரிகள், கம்ப்யூட்டர் போட்டி, சுமங்கலி பூஜை, திருவிளக்குபூஜை, மருத்துவ முகாம், மெகந்தி போட்டி பாரத் கேஸ் வெங்கடேஷ்வரா ஏஜென்சி சார்பில் சமையல் போட்டி, பரதநாட்டியம் வில்லிசை, பால்குட ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
மஞ்சள்பெட்டி ஊர்வலம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை அன்ன பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மன்னர் ராஜா கோவிலில் இருந்து குதிரைகள் முன் செல்ல மேளதாளம் முழங்க முத்துக்குடைபவனி வர, சுவாமி வேடம் அணிந்தவர்கள் முன்செல்ல மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டு சுடலை ஆண்டவர் கோவிலை அடைந்தது. பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை மற்றும் சுவாமி மஞ்சள் நீராடுதல் நடந்தது.
திரளான பக்தர்கள்
விழாவில் திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, முன்னாள் தலைவர் டாக்டர் புஸ்பலெட்சுமி கனகராஜ், ஏ.கே.சீனிவாசன், தங்கையா ஸ்வீட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம்.குமார், ஆனந்த் கன்ஸ்ட் ரக்ஷன்ஸ் ஆனந்தராஜ், தினேஷ் ராபின், வியானி ராஜ், சாந்தா ரியல் டி சாந்தகுமார், ஏ.பி.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சகாதேவன், ஆனந்தி பட்டாசு முத்துகிருஷ்ணன்,
பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, பனைவெல்ல கூட்டுறவு சங்கத் தலைவர் ராம்குமார் துரைப்பாண்டியன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், கமலா சுயம்புராஜன், லயன்ஸ் முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ், செயலாளர் ஜெயராமன்,
திசையன்விளை பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், மதுராஸ்டோர் சரவணன், நெல்லை செல்வி மஹால் அருண் சபரி, சண்முகவேல் பர்னிச்சர் மணிகண்டன், ஸ்ரீமதி ஜீவல்லரி அரிகரசுதன், ஸ்ரீசண்முகம் ஜூவல்லரி ராகவன், இசக்கிமுத்து, மலையாண்டி குரூப்ஸ் மலையாண்டி,
திசையன்விளை பேரூராட்சி பா.ஜ.க. கவுன்சிலர் லிவ்யா, ஸ்ரீ முருகன் டிம்பர் டிப்போ சுடலையாண்டி, கே.டி.பி.ஆட்டோ திவாகர், செல்வ குமார்ஹார்டுவேர்ஸ் செல்வகுமார், கிங்ஸ்டார் சேர்மத்துரை, சொர்ண ஸ்ரீ ஜுவல்லரி பாலசுப்பிரமணியன், கே.ஆர்.பி டிரேடர்ஸ் கனகராஜ், ராஜா அண்ணாமலை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் செய்திருந்தார்.