மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி
சுரண்டை அருகே மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சுரண்டை:
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலித்தீன் இல்லா தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி, வீராணம் கிராம பஞ்சாயத்தில் நடந்தது. ஆலங்குளம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். வீராணம் கிராம பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஷேக் முகமது, கிருஷ்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய தொடக்கப்பள்ளி, முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளையும், மஞ்சள் நிற துணிப்பைகளையும் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் பர்ணாஸ் ஜான், பாலசுந்தரம், கோமதி, சாமுவேல், ஜிந்தா மதார், வீராணம் தி.மு.க. கிளைக் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், பஞ்சாயத்து துணை தலைவர் ஜமீலா, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.