மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி

மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-10-12 18:45 GMT

சிவகாசி,

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சிவகாசியில் மீண்டும் மஞ்சள் பை மற்றும் தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து இந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த விழிப்புணர்வு பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ராமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்