அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

Update: 2023-03-31 10:31 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் ஒன்றியம் கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு வரவேற்று பேசினார்.

பள்ளி ஆண்டு விழாவையொட்டி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இலக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எல்.பி.பழனிசாமி, பரிசுகளை வழங்கினார். விழாவில் வட்டார கல்வி அலுவலர் சிவகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

-------------------

Tags:    

மேலும் செய்திகள்