ஒட்டகத்தை வைத்து யாசகம்

ஒட்டகத்தை வைத்து யாசகம் பெறப்பட்டது.;

Update: 2023-07-31 19:12 GMT

மணப்பாறை நகரில் நேற்று ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை ஒவ்வொரு கடையாக அழைத்து சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி மணப்பாறை கால்நடை மருத்துவர்கள் அந்த ஒட்டகத்தை அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். ஒட்டகம் திடகாத்திரமான நிலையில் இருந்தது. இருப்பினும் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெறக்கூடாது என்று அறிவுறுத்தி ஒட்டகத்தை அழைத்துச் செல்லும்படி அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரும் அந்த பகுதிக்கு வந்து ஒட்டகத்தை வைத்து யாசகம் எடுப்பதை பார்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்