பழைய யாகசாலையை அகற்ற கோரிக்கை

Update: 2023-03-13 16:29 GMT


கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வரசாமி, கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்காக கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டது. அந்த பழைய யாகசாலைகள் அகற்றப்படவில்லை.

இந்த 2 கோவிலிலும் அமாவாசை, பவுர்ணமி. பிரதோஷம்,சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யதிரளாக வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால் யாகசாலையை அகற்றி வாகனங்கள் நிறுத்த இட வசதியை ஏற்படுத்தி தர ஏற்படும் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்