உக்ர நரசிம்ம பெருமாள் கோவிலில் யாக பூஜை
சீர்காழி அருகே திருக்குரவளூர் உக்ர நரசிம்ம பெருமாள் கோவிலில் யாக பூஜை நடந்தது.;
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்குரவளூர் உக்ரநரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அப்போது உக்ர நரசிம்ம பெருமாளுக்கு சந்தனம், மஞ்சள், பால் மற்றும் பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாக பூஜையில் பல்வேறு நறுமணப் பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் யாகத்தில் இட்டு பூஜிக்கப்பட்டு, கருடாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார், அதனைத் தொடர்ந்து மூலவரான உக்ர நரசிம்ம பெருமாளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உக்ர நரசிம்ம பெருமாளை தரிசனம் செய்தனர்.