தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது -நவாஸ் கனி எம்.பி.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்று நவாஸ் கனி எம்.பி. கூறினார்.

Update: 2022-09-10 20:28 GMT

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. நவாஸ் கனி நேற்று காரில் ராமநாதபுரத்தில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றார். அவருக்கு நெல்லை பாளையங்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மாநில துணைத்தலைவர் கோதர்மைதீன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நவாஸ் கனி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ''நமது நாட்டின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து போராடி சுதந்திரம் பெற்று கொடுத்தது. ஆனால் தற்போது நாடு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால்தான் ராகுல்காந்தி நடைபயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளோம். நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குடிநீர் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கி பணிகளை செய்து வருகிறது'' என்றார்.

அப்போது மாவட்ட தலைவர் மீரான் மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமதுஅலி, இளைஞரணி நிர்வாகி கடாபி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்