வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு

நெல்லையில் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

Update: 2022-12-02 21:55 GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நெல்லை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தமிழ்நாடு வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதனைத் தொடர்ந்து கணினி வழி தேர்வு வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காலை மற்றும் மாலையிலும், 11-ந்தேதி காலையிலும் நடைபெறுகிறது. இந்த எழுத்து தேர்வினை 1,464 தேர்வர்களும், கணினி வழி தேர்வினை 2,928 தேர்வர்களும் எழுத உள்ளனர்.

இந்த எழுத்துத்தேர்வு பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, மேக்தலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏஞ்சலோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடக்கிறது. கணினி வழி தேர்வு முன்னீர்பள்ளம் அருகே உள்ள பி.எஸ்.என். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் நடக்கிறது. தேர்வு அறையில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்