13 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு

தேனி மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி 13 மையங்களில் நடக்கும் போலீஸ் பணிக்கான எழுதுத்தேர்வை 10,760 பேர் எழுதுகின்றனர்.;

Update: 2022-11-22 19:00 GMT

போலீஸ் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், இரண்டாம் நிலை போலீசார், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

தேனி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக தேனி, முத்துத்தேவன்பட்டி, கொடுவிலார்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 760 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னேற்பாடு பணிகள்

இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர். தேர்வு மையங்களை அந்தந்த பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வு மையங்களில் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ கேமராவால் ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்