கோர்ட்டுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு

கோர்ட்டுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

Update: 2022-10-16 14:36 GMT

தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் காலியாக உள்ள முதுநிலை மற்றும் இளநிலை கட்டளை பணியாளர், நகல் எடுப்பவர், நகல் வாசிப்பாளர், நகல் பரிசோதகர் ஆகிய பணியிடங்கள் தேர்வு மூலம் ஆட்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நீதித்துறை தேர்வாணயம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 9 மண்டலங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்வு எழுத வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் 13 தேர்வு மையமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிவரை தேர்வு நடந்தது. இதையொட்டி தேர்வர்கள் காலை 9 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்