டெல்லி போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு: தமிழகத்தில் 7 இடங்களில் நடக்கிறது
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் டெல்லி போலீசில் பணியாற்ற ஆண், பெண் காவலர்களை (நிர்வாகம்) தேர்வு செய்ய உள்ளது.
சென்னை,
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் டெல்லி போலீசில் பணியாற்ற ஆண், பெண் காவலர்களை (நிர்வாகம்) தேர்வு செய்ய உள்ளது.
இதற்காக தென்மண்டலத்தில் இருந்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 246 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு 22 இடங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது.
வருகிற 14-ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வின்போது வாட்ச், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.