சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வுசேலத்தில் 1,049 போலீசார் எழுதினர்

Update: 2023-08-27 19:57 GMT

சேலம்

சேலத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 1,049 போலீசார் எழுதினர். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 274 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், தீயணைப்பு துறையில் 129 நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. சேலம் மாவட்டத்தில் சோனா கல்லூரி, ஜெய்ராம் கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி உள்பட 10 மையங்களில் நடந்த தேர்வை 7 ஆயிரத்து 922 பேர் கலந்து கொண்டு எழுதினர்.

1,642 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள் பலத்த பாதுகாப்புடன் சேலம் ஆயுதப்படை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீசாருக்கு தேர்வு

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதாவது, காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.

அந்த வகையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையில் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆண் போலீசார் 1049 பேரும், பெண் போலீசார் 274 பேரும் என மொத்தம் 1,323 பேர் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

1,049 பேர் எழுதினர்

இவர்களுக்கான எழுத்து தேர்வு சேலம் வைஸ்யா கல்லூரியில் நேற்று நடந்தது. தேர்வுக்கு வந்த போலீசார் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முடிவில், ஆண் போலீசார் 887 பேரும், பெண் போலீசார் 162 பேரும் என மொத்தம் 1049 போலீசார் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

அதேசமயம், தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 222 ஆண் போலீசார், 52 பெண் போலீசார் என 274 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்