எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு

எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Update: 2023-07-31 18:33 GMT

குன்னம்:

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாக பேசியதாக கூறி எழுத்தாளர் பத்ரிசேஷாத்ரியை, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் நேற்று ஜாமீன் கேட்டு குன்னம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. மேலும் பத்ரி சேஷாத்ரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு குன்னம் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்