தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Update: 2022-10-30 19:30 GMT

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் மேலரதவீதியிலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகரசபை தலைவர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல அ.தி.மு.க. நிர்வாகிகள் நைனா முகமது, மச்ச ராஜா, தர்மலிங்கம், வக்கீல் ரவி உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் காதர் முகைதீன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மருது சேனை அமைப்பு நிறுவன தலைவர் ஆதிநாராயணனதேவர், மாநில பொருளாளர் குமரவேல் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மக்கள்நீதி மய்யம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவர் சிலை முன்பு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பொங்கலிட்டு வழிபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்