சபரி சாஸ்தா கோவிலில் ஆராட்டு விழா
காரான் கிராமத்தில் சபரி சாஸ்தா கோவிலில் ஆராட்டு விழா நடந்தது.;
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் காரான் கிராமம் முத்துப்பேட்டை இடையர் குடியிருப்பில் அமைந்துள்ள சபரி சாஸ்தா கோவிலில் 18-ம் ஆண்டு மண்டல ஆராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவர் ஊர்வலம் புறப்பாடாகியது. அப்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அபிஷேக பூஜை பொருட்களை சுமந்தவாறு முத்துப்பேட்டை காரான் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலை வந்தடைந்ததும் 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு பஜனை, அர்ச்சனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சபரி சாஸ்தா கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.