கூடலூரில் விற்பனை செய்த இறைச்சியில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு-உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை
கூடலூரில் விற்பனை செய்த இறைச்சியில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு-உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை
கூடலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயலை சேர்ந்தவர் நெஸ்னா. இவர் கூடலூருக்கு வந்து பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் மாடு இறைச்சி வாங்கி சென்றார். பின்னர் வீட்டுக்கு சென்று இறைச்சியை சமைப்பதற்காக தயார் செய்த போது அதில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் புகார் செய்தபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது, இதனால் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் அனுப்பினார். இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறைச்சியில் புழுக்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.