ஓட்டல் பிரியாணியில் புழு கிடந்ததால் பரபரப்பு
ஓட்டல் பிரியாணியில் புழு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் பகுதியில் பிரபல பிரியாணி கடை உள்ளது. இந்த கடையில் கோவையை சேர்ந்த 2 பேர் முட்டை பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த பிரியாணியில் புழு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்த ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் அங்கு சென்று ஆய்வு செய்தார். புழு கிடந்ததாக கூறப்படும் முட்டை பிரியாணி முழுவதையும் கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புழுவுடன் இருந்த மீதி பிரியாணியையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் ஓட்டல் ஒன்றில் பிரியாணியில் புழு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.