உலக கழிப்பறை தினம் கடைபிடிப்பு
நடுவட்டம் அருகே உலக கழிப்பறை தினம் கடைபிடிக்கப்பட்டது.
கூடலூர்,
நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜாரில் உலக கழிப்பறை தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹீம் ஷா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிப்பறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை பொறியாளர் வின்சென்ட், கோவிந்தன், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.