உலக மண்வள தின விழா

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் உலக மண்வள தின விழா நடந்தது.;

Update: 2022-12-07 19:00 GMT

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் மையம் சார்பில் உலக மண்வள தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், பல்கலைகழகத்தில் உள்ள மண் பரிசோதனை ஆய்வகத்தில் விவசாயிகள் மண்மாதிரி பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை பேணிக் காக்க வேண்டும். உலக மண்வள தினத்தை ஒட்டி இந்த மாதம் (டிசம்பர்) முழுவதும், விவசாயிகள் தங்களின் மண் மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றார்.

இந்த விழாவில் இயற்கை விவசாயி சின்னையா நடேசன், வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார், தொழில்நுட்ப வல்லுனர்கள் சரவணன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவையொட்டி இயற்கை விவசாயம் சார்ந்த இடுபொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்