உலக பிசியோதெரபி தினம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-08 18:16 GMT

குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக பிசியோதெரபி தினம் தேசிய மாணவர் படை சார்பில் கொண்டாடப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் மாநில பிசியோதெரபி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் குமாரபாளையம் லைப் கேர் பிசியோதெரபி கிளினிக் நிறுவனர் மருத்துவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி வரவேற்றார். நிகழ்ச்சியை ஈரோடு 15-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜெய்தீப், நிர்வாக அதிகாரி லெப்டினெனட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெற்றது. உலக பிசியோதெரபி தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினார். மேலும் பிசியோதெரபி முறைகள் முதலுதவிகள் செய்யும் முறை, மருந்துகள் இல்லா மருத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 50 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் சிவக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன், 50 என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்