உலக புகைப்பட தினவிழா பேரணி
கோவில்பட்டியில் உலக புகைப்பட தினவிழா பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு 183-வது ஆண்டு உலக புகைப்பட தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் சார்பில் நேற்று மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் பேரணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க கவுரவ தலைவர் பிச்சையா தலைமை தாங்கினார். தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமர் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் கா.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு மூத்த புகைப்பட கலைஞர்கள் 10 பேருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நல சங்க பொருளாளர் துரைராஜ், துணைத் தலைவர் ஜி.எம்.மாரியப்பன், துணைச் செயலாளர் முருகன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி மெயின் ரோடு, புது ரோடு, எட்டையபுரம் ரோடு வழியாக காந்தி மைதானத்தில் முடிந்தது.