உலக மருந்தாளுனர் தின விழா

நாகையில் உலக மருந்தாளுனர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-29 18:45 GMT

நாகையை அடுத்த பாப்பா கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுனர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் சங்கரானந்த் வரவேற்றார். விழாவில் நாகை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த மெடிக்கல் கடை உரிமையாளருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து கல்லூரியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்