கோவில்பட்டியில்உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில்உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Update: 2022-10-10 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட மனநல திட்டம் மற்றும் ஆக்டிவ் மைன்ட்ஸ் மனநல காப்பகங்கள் இணைந்து கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மனநல நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. பேரணியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தி கலந்துகொண்டனர். பேரணி தொடக்க விழாவிற்கு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ராஜாராம், மாவட்ட மனநல மருத்துவர் நிரஞ்சனாதேவி, நிலைய மருத்துவர் பூவேஸ்வரி, ஆக்டிவ் மைன்ட்ஸ் தலைவர் தேன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை தலைவர் கருணாநிதி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி புது ரோடு, மெயின் ரோடு வழியாக ெரயில் நிலையம் வரை சென்று திரும்பி வந்தது. இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி அரங்கில் விழிப்புணர்வு கூட்டம் டாக்டர் கமலவாசன் தலைமையில் நடந்தது. மாவட்ட மனநல மருத்துவர் நிரஞ்சனாதேவி பேசினார். கூட்டத்தில் பேராசிரியர்கள் விஜயகோபால், கற்குவேல் ராஜ், வெற்றி செல்வன், ஜெயா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் அன்னை இந்திரா உரிமை பாதுகாப்பு மையத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஆக்கி கழகச் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி முன்னிலை வகித்தார். இயக்குனர் சோலையம்மாள் வரவேற்று பேசினார். நகரசபை கவுன்சிலர் கனகராஜ், கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நாட்டாமை அர்ஜூனன், களப்பணியாளர் சுபத்ரா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்