நிம்மியம்பட்டில் உலக மலேரியா தின நிகழ்ச்சி

நிம்மியம்பட்டில் உலக மலேரியா தின நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-25 18:11 GMT

வாணியம்பாடி

நிம்மியம்பட்டில் உலக மலேரியா தின நிகழ்ச்சி நடந்தது.

ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி மேல்நிம்மியம்பட்டு கிராமத்தில் உலக மலேரியா தின நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி தலைமை தாங்கினார்.

சிறப்பு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம், திருப்பத்தூர் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ப.ராமலிங்கம், மலேரியா காய்ச்சல் பரவும் விதம், கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பிரித்தா பழனி, நிம்மியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு.சரவணகுமார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் இ.அப்பாஸ், கிராம நிர்வாக அலுவலர் ச. சற்குணகுமார், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா, சுகாதார பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்