உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம்
ஆவணியாபுரம் கிராமத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆவணியாபுரம் கிராமத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
செய்யாறு சுகாதார பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் தலைமை தாங்கி மலேரியா தினத்தை முன்னிட்ட கொசுவினால் ஏற்படும் யானைக்கால் நோய், காய்ச்சல் உள்ளிட்டவை குறித்தும், கொசுக்களை ஒழிப்பது குறித்தும் பேசினார்.
மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, வையாபுரி,முகமது கவுஸ் மற்றும் டெங்கு, களப்பணியாளர்கள, பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் பலராமன் நன்றி கூறினார்.