செட்டிநாடு சிமெண்டு நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
செட்டிநாடு சிமெண்டு நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாடப்பட்டது.;
அரியலூர்
கீழப்பழூர் செட்டிநாடு சிமெண்டு நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இந்த வருடத்திய கருப்பொருளான ஒரே ஒரு பூமி மற்றும் இயற்கையோடு இணக்கமாக நீடித்து வாழ்தல் பற்றி ஆலைத்தலைவர் ஏ.அமல்ராஜ் விளக்கி கூறினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது, வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற நிகழ்ச்சிகளுடன் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆலையின் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.