வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக யானைகள் தின கொண்டாட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக யானைகள் தினத்தை கொண்டாடினர்.

Update: 2022-08-13 09:14 GMT

யானைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. யானைகள் பல வழிகளில் தங்கள் வாழ்விடத்தை வடிவமைத்துக்கொள்கின்றன. ஆகஸ்டு மாதம் 12-ந்தேதியை உலக யானைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகளின் விருப்ப உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர். இந்த பூங்காவில் ரோகிணி மற்றும் பிரக்ருதி என 2 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் விலங்கினமாகும். யானைகள் தினத்தையொட்டி இந்த யானைகளுக்கு பலாப்பழம், தர்பூசணி, கரும்பு, வெல்லம், தென்னங்கீற்றுகள், மூங்கில் இலைகள், புற்கள் போன்றவை தீவனத்துடன் வழங்கப்பட்டன. பூங்கா அளித்த விருந்தை யானைகள் விரும்பி உண்டு மகிழ்ந்தன. உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி), அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுடன் இணைந்து யானைகள் பற்றிய இணையவழி பேச்சரங்கை நடத்தியது. இந்த தகவல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்