உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூரில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-14 19:55 GMT

கடலூர், 

முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கடலூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதற்கு புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை வழியாக அரசு தலைமை ஆஸ்பத்திரியை சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமை தாங்கி, முதியோர் தேவைகளை புரிந்து கொள்ளுதல், இளைஞர்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றியும், அவர்களது பொறுப்பு பற்றியும் எடுக்கப்பட்ட விவரங்களின் அறிக்கையை வெளியிட்டார். கடலூர் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சாய்லீலா முன்னிலை வகித்தார். சமூக நல அலுவலர் சித்ரா சிறப்புரையாற்றினார். இதில் மூத்த வக்கீல் அருணாசலம், சத்தியபாபு, தயாநிதி, பாரத்வேல் மற்றும் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், முதியோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்