உலக தென்னை தின விழா

கொள்ளிடம் அருகே உலக தென்னை தின விழா

Update: 2023-09-04 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி சார்பில் உலக தென்னை தின விழா நடந்தது. இதில் கிராமத்தில் உள்ள பொது இடங்களிலும், கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் சாலையோர பகுதி, கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் தென்னங்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரஸ் நேவ் தென்னங்கன்றை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி செயலாளர் ராஜேஷ் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தென்னங்கன்றுகளை நட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்