உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு

திருச்செந்தூரில் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-02-04 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கலைக்குருச்செல்வி வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பாவநாசகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புற்றுநோயினை தடுக்கும் முறைகள், ஆரம்ப காலத்திலேயே கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பேசினார்.

பின்னர் மாணவிகள் கோகிலா, கிருஷ்ணவேணி ஆகியோர் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் முறைகள், சிகிச்சை முறைகள் மற்றும் புற்றுநோயை தடுக்கும் உணவு வகைகள் பற்றியும் ஒளி ஒலி விளக்க காட்சி மூலம் மக்களுக்கு தெளிவாக விளக்க உரையாற்றினர். முடிவில், களப்பயிற்சியாளர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார். மேலும் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்