பாண்டியநல்லூர் அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.;

Update: 2022-08-09 18:08 GMT

சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருகினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜூ, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, பெருமாள், ராமன், கோவிந்தசாமி, மதன்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஒன்றியகுழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், பா.ம.க. மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், வழக்கறிஞர் ஓய்.சி. ரகுராம்ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதனையொட்டி ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது.

நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம் குறித்தும வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது தாய்மார்கள், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்