உலக மிதிவண்டி தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக மிதிவண்டி தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-06-03 18:30 GMT

பெரம்பலூர்:

மத்திய அரசின் நேரு யுவகேந்திராவின் சார்பில் பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தின ஆண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 623 மாவட்டங்களில் "உலக மிதிவண்டி (சைக்கிள்) தின விழிப்புணர்வு ஊர்வலம்" நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்பட்டு வருகிற இளையோர் மன்றங்களின் வாயிலாக அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தேசிய தன்னார்வ தொண்டர்கள் மூலமாக உலக மிதிவண்டி தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மன்ற தலைவர்களும் மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும், நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்டோரும் மிதிவண்டி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளையோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்