உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-12-09 19:28 GMT

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு "சமப்படுத்துதல்" என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக உலக எய்ட்ஸ் தினம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மருத்துவர் மணிகண்டன் மற்றும் எச்.ஐ.வி. உடன் வாழ்பவர்களுக்கான தொண்டு நிறுவனம், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய ஆலோசகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்