100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்

செஞ்சி அருகே 100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினா்.;

Update: 2022-12-10 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி ஊராட்சி ஒன்றியம் காரை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கக்கோரி செஞ்சி-அனந்தபுரம் சாலையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அனந்தபுரம் போலீசார் மற்றும் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்