சேலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்-12-ந் தேதி நடக்கிறது

சேலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-12-02 22:18 GMT

சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமார் தலைமையிலும், கிருஷ்ணகிரியில் உள்ள அலுவலகத்தில் ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையிலும் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டம் சந்தாதாரர்களுக்கு அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. தொழில்அதிபர்களுக்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடக்கிறது. எனவே வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி ஆகியவற்றுடன் வருகிற 9-ந்தேதிக்கு முன்னதாக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்