கல்குவாரியில் கற்களை அகற்றியபோது தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு

ராஜபாளையம் அருகே கல்குவாரியில் கற்களை அகற்றியபோது தவறி விழுந்த தொழிலாளி பலியானார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-02-09 19:16 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே கல்குவாரியில் கற்களை அகற்றியபோது தவறி விழுந்த தொழிலாளி பலியானார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கல்குவாரி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு பாறைகளை உடைக்க நேற்று முன்தினம் இரவு வெடி வைத்துள்ளனர்.

அங்கு இளந்திரை கொண்டான் பகுதியை சேர்ந்த மாரிக்கனி (வயது 50). தென்காசி வலசைைய சேர்ந்த முத்துமாணிக்கம் (45), சாமிராஜா (40) ஆகிய 3 ேபரும் வேலையில் இருந்துள்ளனர்.

ஒருவர் பலி

கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது திடீரென 3 பேரும் தவறி விழுந்தனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில் மாரிக்கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 2 பேரையும் மீட்டு சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூா் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிக்கனியின் உடலை பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்