திண்டிவனம்
திண்டிவனத்தை அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாளையன்(வயது 88). தொழிலாளி. சம்பவத்தன்று பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்த பாளையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.