தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-02-07 12:02 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 56). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. சம்பவத்தன்று மகேந்திரனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்ததாக தெரிகிறது.

இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து, மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்