தொழிலாளி தற்கொலை
சிவகாசியி்ல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சிவகாசி,
சிவகாசி ரிசர்வ்லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). கட்டிட ெதாழிலாளியான இவர் முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்ற நிலையில் கிருஷ்ணவேணி என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். குடிபழக்கம் உள்ள பரமசிவம் வருமானத்தை வீட்டில் கொடுக்காமல் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.