காட்டுமன்னார்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-29 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கு மகாராணி (34) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுயஉதவி குழு மூலம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட கிருஷ்ணன் நேற்று முன்தினம் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்