தொழிலாளி தற்கொலை

தொழிலாளி விஷப்பவுடரை தின்று பரிதாபமாக இறந்தார்

Update: 2022-06-12 21:43 GMT

நெல்லை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). கூலி தொழிலாளியான இவர் கிணறு தோண்டும் வேலைக்காக நெல்லை அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மாரியப்பன் நேற்று திடீரென்று விஷப்பவுடரை தின்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்