தொழிலாளி தற்கொலை
வேடசந்தூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). இவர், விருதலைப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி செல்வமணி. இவர், கடந்த ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குமரேசன், நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.