தொழிலாளி தற்கொலை

குலசேகரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-22 18:56 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம் அருகே பொன்மனையை அடுத்த பெருவழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65), தொழிலாளி. இவருக்கு கோசலை என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து செல்வராஜ் தனியாக விசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் மதியம் ஆன பிறகும் செல்வராஜ் வீட்டில் இருந்து வெளிேய வரவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அங்கு செல்வராஜ் படுத்து கிடந்தார். அவரை அழைத்தும் எந்த பதிலும் வராததால், குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்